வெள்ளி, 14 நவம்பர், 2008

பௌர்ணமிக்காக....

தூங்கும் நிலவின்துயில் கலைந்து...
சோக விழிகள்துயர் மறந்து...
ஏங்கும் எந்தன் இரு விழிகள்...
என்றுன் தரிசனம் காண்பதுவோ?


இரவின் நிழல் விழும் ஓரிடத்தில்..
இன்னும் காத்துக் கிடக்கின்றேன்..

வரவில் தாமதம் ஏதுமென்றால்..
வருமுன் சேதி அனுப்பாயோ?

பிள்ளைத்தமிழின் சாறெடுத்து..
பிசைந்த கவிதைத் தேன் துளிகள்..
அள்ள அள்ளக் குறையாமல்
அத்தனை அழகாய் உனை வடித்தேன்..


மெல்ல மெல்லத் திரை விலக்கி
மெதுவாய் தரிசனம் தருகின்றாய்..
எல்லை இல்லா வான்வெளியில்
இழந்த இளமையைப் பெறுகின்றாய்...

செவ்வாய், 11 நவம்பர், 2008

எனது கணித ஆசான்

கடலெனும் கணிதம் துளி என அருந்தி
காவியம் படைத்திட வழி சமைத்தான்.....தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் உருக்கி
உயிரெனும் கணிதச் சுவை அமைத்தான்..

நிகரிலா வழிகள் நிதம் நிதம் வகுத்து
நமக்கென வழங்கிய ஒரு ஆசான்....நம்
அகம் மிக மகிழ்வுற அதிசயக் கணிதத்தை
அளித்திட்ட அவனும் ஒரு ஈசன்....

"நன்றி மறப்பது நன்றன்று"

திங்கள், 10 நவம்பர், 2008

I am Harishan...


Strength in hands..

Sweet in speech...

Pure in thought...

Love in heart...

I am Harishan...who can be a different person at any time..and anywhere...

இன்னும் நிறைய இருக்கிறதே?...


சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டியவை... வேதனைகள்
உணரப்பட வேண்டியவை...
இன்பங்கள் அனுபவிக்கப்பட வேண்டியவை..
துன்பங்கள் சுமக்கப்பட வேண்டியவை...
அன்பு..அன்பு...
அது..வெளிப்படுத்தப்பட வேண்டியது...