தூங்கும் நிலவின்துயில் கலைந்து...
சோக விழிகள்துயர் மறந்து...
ஏங்கும் எந்தன் இரு விழிகள்...
என்றுன் தரிசனம் காண்பதுவோ?
இரவின் நிழல் விழும் ஓரிடத்தில்..
இன்னும் காத்துக் கிடக்கின்றேன்..
வரவில் தாமதம் ஏதுமென்றால்..
வருமுன் சேதி அனுப்பாயோ?
பிள்ளைத்தமிழின் சாறெடுத்து..
பிசைந்த கவிதைத் தேன் துளிகள்..
அள்ள அள்ளக் குறையாமல்
அத்தனை அழகாய் உனை வடித்தேன்..
மெல்ல மெல்லத் திரை விலக்கி
மெதுவாய் தரிசனம் தருகின்றாய்..
எல்லை இல்லா வான்வெளியில்
இழந்த இளமையைப் பெறுகின்றாய்...
வெள்ளி, 14 நவம்பர், 2008
செவ்வாய், 11 நவம்பர், 2008
எனது கணித ஆசான்
கடலெனும் கணிதம் துளி என அருந்தி
காவியம் படைத்திட வழி சமைத்தான்.....தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் உருக்கி
உயிரெனும் கணிதச் சுவை அமைத்தான்..
நிகரிலா வழிகள் நிதம் நிதம் வகுத்து
நமக்கென வழங்கிய ஒரு ஆசான்....நம்
அகம் மிக மகிழ்வுற அதிசயக் கணிதத்தை
அளித்திட்ட அவனும் ஒரு ஈசன்....
"நன்றி மறப்பது நன்றன்று"
காவியம் படைத்திட வழி சமைத்தான்.....தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் உருக்கி
உயிரெனும் கணிதச் சுவை அமைத்தான்..
நிகரிலா வழிகள் நிதம் நிதம் வகுத்து
நமக்கென வழங்கிய ஒரு ஆசான்....நம்
அகம் மிக மகிழ்வுற அதிசயக் கணிதத்தை
அளித்திட்ட அவனும் ஒரு ஈசன்....
"நன்றி மறப்பது நன்றன்று"
திங்கள், 10 நவம்பர், 2008
I am Harishan...
இன்னும் நிறைய இருக்கிறதே?...
ஞாயிறு, 26 அக்டோபர், 2008
Why did you leave me?
I was like the sky..
you came as a moon..
why did you leave me?
waiting still, come soon..
took my dreams with you..
twisted me, killed me, gone..
hooked my heart with you..
come and meet me soon..
you came as a moon..
why did you leave me?
waiting still, come soon..
took my dreams with you..
twisted me, killed me, gone..
hooked my heart with you..
come and meet me soon..
now I've got my lane..
how can I walk alone..
why did you leave me?
waiting still, come soon..
how can I walk alone..
why did you leave me?
waiting still, come soon..
தர்மத்தின் வாழ்வுதன்னை....
இதற்குக் காரணம் இல்லாமலா போய்விடும்?
காத்திருங்கள்....பார்த்திருங்கள்
காலத்தின் பதில்களுடன் சந்திப்போம்.....
வெள்ளி, 24 அக்டோபர், 2008
ஒரு நிமிடம்.....
என்னடா இவன் ஒரு பைத்தியக்காரன் போல ...படங்களையும் வீடியோக்களையும் போட்டுத் தொலைச்சிருக்கிறானே...என்றா
பார்க்கிறீர்கள்?
இவையெல்லாம் வாழ்க்கையின் சிறிய இன்பங்கள் ...
இதையும் அனுபவித்துப் பார்ப்போமே...
நான் , எதிர்காலத்தின்
தெளிவற்ற காட்சிகளை நம்பியோ ....
இறந்த காலத்தின் கறைபட்ட தளும்புகளால் வெம்பியோ....
நிகழ்காலத்தை தொலைப்பவன் அல்ல.....
எனக்குள் இருப்பது அன்பு மட்டுமே ...எழுத்தாய் வடிவது எண்ணம் மட்டுமே ...நான் கடந்து வந்த பாதைகளில் என் காலில் தைத்த முட்களுக்காகவும் மனம் வருந்தி இருக்கிறேன் ...என் கண்ணைக் கொய்த பூக்களைக் கண்டு புன்னகைக்காமலும் இருந்திருக்கிறேன்....
வாழ்க்கையின் வசந்தங்களை நான் உணரத்தொடங்கியபோது எனக்குள்
உயிர்த்துக்கொண்டது ஒரு கேள்வி ...எதை நோக்கிய பயணம் இது? எங்கே சென்று முடிவதிது?..உலகத்தின் இருளடைந்த பக்கங்களில் நான் எழுதப் போகும் கவிதை எது?
எல்லாவற்றிற்கும் நான் எழுதப் போகும் விடைகளே இந்தப் பயணம்...
எனது இந்த உலகில் கவிதைகள் உண்டு..கதைகள் உண்டு...கனவிலும் நினைக்க
முடியாத தத்துவங்கள் உண்டு .....பாடல் இசைகளும் பலவித அசைவுகளுமாய் எனக்குள் எரியும் ஒரு தேசம் இது ...இனி உங்களுடன்...சுவாசிக்கட்டும் ...
உங்களின் ஒரு நிமிட நேரத்துக்கு நன்றி...
பார்க்கிறீர்கள்?
இவையெல்லாம் வாழ்க்கையின் சிறிய இன்பங்கள் ...
இதையும் அனுபவித்துப் பார்ப்போமே...
நான் , எதிர்காலத்தின்
தெளிவற்ற காட்சிகளை நம்பியோ ....
இறந்த காலத்தின் கறைபட்ட தளும்புகளால் வெம்பியோ....
நிகழ்காலத்தை தொலைப்பவன் அல்ல.....
எனக்குள் இருப்பது அன்பு மட்டுமே ...எழுத்தாய் வடிவது எண்ணம் மட்டுமே ...நான் கடந்து வந்த பாதைகளில் என் காலில் தைத்த முட்களுக்காகவும் மனம் வருந்தி இருக்கிறேன் ...என் கண்ணைக் கொய்த பூக்களைக் கண்டு புன்னகைக்காமலும் இருந்திருக்கிறேன்....
வாழ்க்கையின் வசந்தங்களை நான் உணரத்தொடங்கியபோது எனக்குள்
உயிர்த்துக்கொண்டது ஒரு கேள்வி ...எதை நோக்கிய பயணம் இது? எங்கே சென்று முடிவதிது?..உலகத்தின் இருளடைந்த பக்கங்களில் நான் எழுதப் போகும் கவிதை எது?
எல்லாவற்றிற்கும் நான் எழுதப் போகும் விடைகளே இந்தப் பயணம்...
எனது இந்த உலகில் கவிதைகள் உண்டு..கதைகள் உண்டு...கனவிலும் நினைக்க
முடியாத தத்துவங்கள் உண்டு .....பாடல் இசைகளும் பலவித அசைவுகளுமாய் எனக்குள் எரியும் ஒரு தேசம் இது ...இனி உங்களுடன்...சுவாசிக்கட்டும் ...
உங்களின் ஒரு நிமிட நேரத்துக்கு நன்றி...
வெள்ளி, 17 அக்டோபர், 2008
எனக்குள் எழும் கேள்வி
தூறிப் பெய்யும் மழையினிலே...
தூர எறிக்கும் வெயிலினிலே...
மாறிப் பிறக்கும் இரவினிலே...
வாசம் கொடுக்கும் மலர்களிலே...
வேறு எங்கும் காணாத
விண்மீன் திரளின் வெளிச்சத்தில்...
ஏறி நின்று பார்த்தாலும்
எங்கும் தெரிவது நீ தானே....
மாயத் திரையின் விழிப் பரப்பில்
வண்ணக் கனவின் ஒரு ஈர்ப்பில்
தோயத் தொடங்கிய என் மனதில்
தோன்றும் நாடகம் நீ தானே....
நேயக் கடலின் நீரலைக்குள்
நீந்தித் தவிக்கும் என்னுள்ளம்
தூயத் தேன்தமிழ்க் கவி வார்க்க- அங்கும்
தோன்றி மறைவது நீ தானே....
தூர எறிக்கும் வெயிலினிலே...
மாறிப் பிறக்கும் இரவினிலே...
வாசம் கொடுக்கும் மலர்களிலே...
வேறு எங்கும் காணாத
விண்மீன் திரளின் வெளிச்சத்தில்...
ஏறி நின்று பார்த்தாலும்
எங்கும் தெரிவது நீ தானே....
மாயத் திரையின் விழிப் பரப்பில்
வண்ணக் கனவின் ஒரு ஈர்ப்பில்
தோயத் தொடங்கிய என் மனதில்
தோன்றும் நாடகம் நீ தானே....
நேயக் கடலின் நீரலைக்குள்
நீந்தித் தவிக்கும் என்னுள்ளம்
தூயத் தேன்தமிழ்க் கவி வார்க்க- அங்கும்
தோன்றி மறைவது நீ தானே....
சனி, 11 அக்டோபர், 2008
நிலவுக்கு கடிதம்
நினைவில்....
நினைவில் நிஜத்தில் -உன்
நிழல் விழும் இடத்தில் ...
தொலைவில் அருகில் -உனைத்
தொடர்ந்திடும் பொழுதில்...
எனை நான் கொஞ்சம்
இழந்திடும் வரைக்கும்...
உனை என் நெஞ்சம்
உயிரென உரைக்கும்....
இளமைச் சுவட்டில் -உன்
இளவான் முகட்டில்...
இதயம் நிலவென
இலங்கிடும் அகத்தில்...
அழகாய் பூத்த
ஒரு மலரானாய்...
அன்பில் வார்த்த
என் உயிரானாய்...
நிழல் விழும் இடத்தில் ...
தொலைவில் அருகில் -உனைத்
தொடர்ந்திடும் பொழுதில்...
எனை நான் கொஞ்சம்
இழந்திடும் வரைக்கும்...
உனை என் நெஞ்சம்
உயிரென உரைக்கும்....
இளமைச் சுவட்டில் -உன்
இளவான் முகட்டில்...
இதயம் நிலவென
இலங்கிடும் அகத்தில்...
அழகாய் பூத்த
ஒரு மலரானாய்...
அன்பில் வார்த்த
என் உயிரானாய்...
வெள்ளி, 10 அக்டோபர், 2008
காத்திருப்புக்கள் தொடர்கின்றன.....
தானாக நீர் வடியும் என் கண்களுடன்
மரணம் வரைக்கும் காத்திருக்கிறேன்.....
நீயோ வாழ்வின் தொடக்கத்தில் நிற்கிறாய்....
ஆனாலும் பரவாயில்லை....
என் மரணத்தை உன் வாழ்வின் தொடக்கமாக்கிககொள்....
முற்றுப்புள்ளி முடிவின் அறிகுறிதான் ஆனால்...
அது இன்னொரு வாக்கியத்தின் தொடக்கம்...
என் முடிவை தொடக்கமாக்கிககொள்....
மரணம் வரைக்கும் காத்திருக்கிறேன்.....
நீயோ வாழ்வின் தொடக்கத்தில் நிற்கிறாய்....
ஆனாலும் பரவாயில்லை....
என் மரணத்தை உன் வாழ்வின் தொடக்கமாக்கிககொள்....
முற்றுப்புள்ளி முடிவின் அறிகுறிதான் ஆனால்...
அது இன்னொரு வாக்கியத்தின் தொடக்கம்...
என் முடிவை தொடக்கமாக்கிககொள்....
திங்கள், 6 அக்டோபர், 2008
வெள்ளி, 4 ஜூலை, 2008
வெள்ளி, 9 மே, 2008
சனி, 3 மே, 2008
வெள்ளி, 11 ஏப்ரல், 2008
Welcome to Harishan's world
Keeping the track may help your feet. But, making the track will safe your life.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)





