செவ்வாய், 11 நவம்பர், 2008

எனது கணித ஆசான்

கடலெனும் கணிதம் துளி என அருந்தி
காவியம் படைத்திட வழி சமைத்தான்.....தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் உருக்கி
உயிரெனும் கணிதச் சுவை அமைத்தான்..

நிகரிலா வழிகள் நிதம் நிதம் வகுத்து
நமக்கென வழங்கிய ஒரு ஆசான்....நம்
அகம் மிக மகிழ்வுற அதிசயக் கணிதத்தை
அளித்திட்ட அவனும் ஒரு ஈசன்....

"நன்றி மறப்பது நன்றன்று"

1 கருத்து:

Medipir சொன்னது…

அளிக்கும் ஈசன் சிலவேளைகளில் அழிக்கும் ஈசனாக அல்லவா மாறி விடுகிறார். ஹிஹிஹிஹி
நீ எந்த ஆசானை கூறினாயோ தெரியவில்லை அனால் நான் அந்த அழிக்க முனைந்த ஆசானை பற்றி தான் சொன்னேன் .
கோபம் கொள்ளாதே நண்பா