தூங்கும் நிலவின்துயில் கலைந்து...
சோக விழிகள்துயர் மறந்து...
ஏங்கும் எந்தன் இரு விழிகள்...
என்றுன் தரிசனம் காண்பதுவோ?
இரவின் நிழல் விழும் ஓரிடத்தில்..
இன்னும் காத்துக் கிடக்கின்றேன்..
வரவில் தாமதம் ஏதுமென்றால்..
வருமுன் சேதி அனுப்பாயோ?
பிள்ளைத்தமிழின் சாறெடுத்து..
பிசைந்த கவிதைத் தேன் துளிகள்..
அள்ள அள்ளக் குறையாமல்
அத்தனை அழகாய் உனை வடித்தேன்..
மெல்ல மெல்லத் திரை விலக்கி
மெதுவாய் தரிசனம் தருகின்றாய்..
எல்லை இல்லா வான்வெளியில்
இழந்த இளமையைப் பெறுகின்றாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
அன்னை பராசக்தியை நினைத்து எழுத்தினை போலும். மிக்க நன்றாக இருக்கிறது
கருத்துரையிடுக