சனி, 11 அக்டோபர், 2008

நினைவில்....

நினைவில் நிஜத்தில் -உன்
நிழல் விழும் இடத்தில் ...
தொலைவில் அருகில் -உனைத்
தொடர்ந்திடும் பொழுதில்...
எனை நான் கொஞ்சம்
இழந்திடும் வரைக்கும்...
உனை என் நெஞ்சம்
உயிரென உரைக்கும்....

இளமைச் சுவட்டில் -உன்
இளவான் முகட்டில்...
இதயம் நிலவென
இலங்கிடும் அகத்தில்...
அழகாய் பூத்த
ஒரு மலரானாய்...
அன்பில் வார்த்த
என் உயிரானாய்...

கருத்துகள் இல்லை: