என்னடா இவன் ஒரு பைத்தியக்காரன் போல ...படங்களையும் வீடியோக்களையும் போட்டுத் தொலைச்சிருக்கிறானே...என்றா
பார்க்கிறீர்கள்?
இவையெல்லாம் வாழ்க்கையின் சிறிய இன்பங்கள் ...
இதையும் அனுபவித்துப் பார்ப்போமே...
நான் , எதிர்காலத்தின்
தெளிவற்ற காட்சிகளை நம்பியோ ....
இறந்த காலத்தின் கறைபட்ட தளும்புகளால் வெம்பியோ....
நிகழ்காலத்தை தொலைப்பவன் அல்ல.....
எனக்குள் இருப்பது அன்பு மட்டுமே ...எழுத்தாய் வடிவது எண்ணம் மட்டுமே ...நான் கடந்து வந்த பாதைகளில் என் காலில் தைத்த முட்களுக்காகவும் மனம் வருந்தி இருக்கிறேன் ...என் கண்ணைக் கொய்த பூக்களைக் கண்டு புன்னகைக்காமலும் இருந்திருக்கிறேன்....
வாழ்க்கையின் வசந்தங்களை நான் உணரத்தொடங்கியபோது எனக்குள்
உயிர்த்துக்கொண்டது ஒரு கேள்வி ...எதை நோக்கிய பயணம் இது? எங்கே சென்று முடிவதிது?..உலகத்தின் இருளடைந்த பக்கங்களில் நான் எழுதப் போகும் கவிதை எது?
எல்லாவற்றிற்கும் நான் எழுதப் போகும் விடைகளே இந்தப் பயணம்...
எனது இந்த உலகில் கவிதைகள் உண்டு..கதைகள் உண்டு...கனவிலும் நினைக்க
முடியாத தத்துவங்கள் உண்டு .....பாடல் இசைகளும் பலவித அசைவுகளுமாய் எனக்குள் எரியும் ஒரு தேசம் இது ...இனி உங்களுடன்...சுவாசிக்கட்டும் ...
உங்களின் ஒரு நிமிட நேரத்துக்கு நன்றி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக